இலங்கையில் பிடிபட்ட அரியவகை நாகபாம்பு

இலங்கையில் பிடிபட்ட அரியவகை நாகபாம்பு

வத்துகெட அண்டடோல புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் நேற்று
(29) பிற்பகல் அரியவகை இளஞ்சிவப்பு நாகபாம்பு ஒன்றை பிரதேசவாசிகள் பிடித்து தெஹிவளை விலங்குகள் சரணாலயத்தில் ஒப்படைத்துள்ளனர்.

விஷ ஜந்துக்களை பாதுகாப்பாக பிடித்து காட்டுக்குள் விடுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பலபிட்டிய ஹினாட்டி டபிள்யூ.ஏ. ஜாக்சன். வத்துகெட அண்டடோல வீடொன்றின் முற்றத்தில் வைத்து இந்த இளஞ்சிவப்பு நாகப்பாம்பை பிடித்துள்ளார்.


தெஹிவளை விலங்கியல் பூங்காவின் பாம்புப் பிரிவு அதிகாரிகளுக்கு, பிடிபட்ட இளஞ்சிவப்பு நாகபாம்பின் புகைப்படங்கள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
அவர்கள் அதனை பார்வையிட்டு, இது அபூர்வ நாகப்பாம்பு என்பதால் அதை காட்டுக்குள் விட வேண்டாம் என்றும், அதை தமது நிறுவனத்தில் இருந்து வரும் வரை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் தெரிவித்தனர்.
அதன்படி குறித்த நாகபாம்பை காட்டுக்குள் விடாமல் ஒரு போத்தலில் பத்திரமாக வைத்து தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்க ஜாக்சன் ஏற்பாடு செய்தார்.