தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் நிறைவடையும் வரையில் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விடயத்தினை கல்வி அமைச்சு (MOE) மற்றும் பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) என்பவற்றுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID)அதிகாரிகள் நேற்று முன்தினம் (01) மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்ததாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டும் என சில பெற்றோர்கள் கோருகின்ற நிலையில், மீண்டும் பரீட்சை நடத்தப்படக் கூடாது எனப் பரீட்சைக்குத் தோற்றிய பெரும்பாலான சிறுவர்களும் கோருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த விடயம் தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்காகப் புலமைப்பரிசில் பரீட்சையில் பாதிப்பை எதிர்நோக்கிய தரப்பினர் சிலர் நேற்றைய தினம் (02) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.