வரி செலுத்தாத நபர்களிடமிருந்து வரியை வசூலிப்பதற்கான புதிய திட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர குறிப்பிட்டுள்ளார்.
2023/2024 மதிப்பீட்டு ஆண்டு தொடர்பில், இதுவரை வரி செலுத்தாத நபர்களின் வளாகங்களுக்கு சென்று வரி வசூலிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்நாட்டு இறைவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது.
சுயமதிப்பீட்டுக் கொடுப்பனவுகளின் கீழ், வரி செலுத்த வேண்டியோர் இன்னும் இருப்பதாக அடையாளங்காணப்பட்டுள்ளதால், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அவர்களின் வளாகங்களுக்குச் சென்று அவற்றை வசூலிக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, செலுத்தப்படாத சுயமதிப்பீட்டு வரியை சட்ட நடைமுறைக்கு ஏற்ப உடனடியாக வசூலிக்க அந்த திணைக்களம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
அத்துடன், இந்த வருடம் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை உள்நாட்டு இறைவரி திணைக்களம் 1417 பில்லியன் ரூபாவை வரியாக வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 2024 ஆம் ஆண்டிற்கான வருவாய் இலக்கான 2024 பில்லியன் ரூபாயில் 70 சதவீதத்தை தாண்டிய ஒரு எண்ணிக்கையாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.