யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நொதேர்ன் யுனி (Northern Uni) மாணவர்கள் தலைமையிலான செயற்கைக்கோள் திட்டத்தை தொடங்குவதற்கு Space Kidz இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணத்தில் உள்ள அரச பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களையும், இந்திய மாணவர்களையும் ஒன்றிணைத்து, செயற்கைக்கோளை வடிவமைத்து உருவாக்கி விண்ணில் செலுத்தவுள்ளது.
இந்த செயற்கைக்கோள் விண்வெளியை ஆய்வு செய்யும் கருவிகளை சுமந்து செல்லும்.குறித்த திட்டமானது இரண்டு கட்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதன் முதல் கட்டமாக விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்துகிறது,
இலங்கையில் இருந்து 50 பாடசாலை மாணவர்களும் 50 பல்கலைக்கழக மாணவர்களும் இந்தியாவில் இருந்து 10 பாடசாலை மாணவர்களும் பயிற்சி பெறவுள்ளனர்.
இந்த கட்டமானது, பங்கேற்பாளர்களுக்கு செயற்கைக்கோள் மேம்பாடு மற்றும் விண்வெளிப் பயணங்கள் பற்றிய அடிப்படை புரிதலை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று SLIIT Northern Uni வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.