இலங்கையில் விற்பனை செய்யப்படும் கேக்குகள், முட்டை ,வெண்ணெய் அல்லது மார்ஜரின் கொண்டு தயாரிக்கப்படவில்லை என்பதை நுகர்வோர் நினைவில் கொள்ள வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,கேக்கில் உள்ள பொருட்களை பரிசோதிக்க இன்னும் எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.
கேக் தயாரிப்புகளில் பெரும்பாலும் வெண்ணெய் சுவை மற்றும் செயற்கை முட்டை சுவை உள்ளது.
இதனால் லேபிள்களில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்கள் போலியானவை என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் முட்டை அல்லது வெண்ணெய் அல்லது மார்ஜரின் போன்றவற்றை கேக் உற்பத்திக்கு பயன்படுத்துவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான முறைகேடுகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைபடுத்துவதற்காக 44 வருடங்களுக்கு முன்னர் 1980 ஆம் ஆண்டு 26 ஆம் இலக்க உணவு சட்டத்தின் ஏற்பாடுகள் உரிய முறையில் தண்டனை வழங்குவதற்கு இதுவரை தயாராகவில்லை எனவும் பொது சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்துள்ளார்.