மின்சாரக் கட்டணங்கள் தொடர்பிலான விலைப் பொறிமுறைமையை மாற்றியமைப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை மின்சக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால (Udayanga Hemapala) குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், மக்களுக்கு கூடுதல் நிவாரணம் அளிக்கக்கூடிய மின் கட்டண முறையை அறிமுகம் செய்யும் நோக்கில் விலைச் சூத்திரம் மீளாய்வு செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மீளாயவின் பின்னர், புதிய விலைப் பொறிமுறைமையை ஜனாதிபதியும் துறைசார் அமைச்சருமான அநுரகுமார திஸாநாயக்க அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, குறித்த யோசனையை புதிய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் பகுப்பாய்வு ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.