விண்வெளியில் 290 மில்லியன் மைல்கள் தொலைவிற்கு பாய்ந்த லேசர் சிக்னல்: NASA சாதனை

நாசா (NASA) தனது லேசர் சிக்னலை சுமார் 290 மில்லியன் மைல் தொலைவிற்கு வெற்றிகரமாக அனுப்பி சாதனை படைத்துள்ளது.

பூமிக்கு வெளியே வாழும் உயிரினங்களை தொடர்பு கொள்ள இந்த லேசர் தொழில்நுட்பம் புதிய வழிகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023-ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கிய Psyche விண்கலம், அதன் சோதனையான Deep Space Optical Communications தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சாதனையை எட்டியுள்ளது.

நாசாவின் ஜெட் புரொபல்ஷன் லாப் ப்ராஜெக்டின் இயக்கத்தலைவர் டாக்டர் மீரா ஸ்ரீனிவாசன், “இந்த சாதனை முக்கியமானது. லேசர் கம்யூனிகேஷன் மிகவும் துல்லியமாக இருக்க வேண்டும், இதன் மூலம் சூரியக் குடும்பத்தை ஆராய்வதில் இது மாற்றத்தை ஏற்படுத்தும்,” என்று கூறினார்.

லேசர்கள், சிக்கலான விஞ்ஞானத் தகவல்களையும், உயர் தீர்மானப் படங்களையும் வேகமாக அனுப்பி வைக்கும் திறன் கொண்டவை என்பதால், எதிர்கால மங்கள்ச் சோதனைப் பயணங்களுக்கும், பிற விண்வெளி ஆராய்ச்சிகளுக்கும் உதவலாம்.

இந்த லேசர் தொழில்நுட்பம் வானொலி அலைகளை விட 100 மடங்கு அதிகமாக தரவுகளை அனுப்பும் திறன் கொண்டது, இது மானுடத்தை செவ்வாய் கிரகத்திற்கு அப்பால் கொண்டு செல்லும் முயற்சிகளுக்கு வித்திடும்.