இலங்கையின் உள்நாட்டு விமான சேவையான சினமன் எயார், கண்டி மற்றும் சிகிரியா தொடக்கம் தென் கரையோர பிரதேசங்களான, கொக்கல மற்றும் ஹம்பாந்தோட்டையுடன் இணைக்கும் விமான சேவைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன.
இரண்டு புதிய தினசரி திட்டமிடப்பட்ட விமான சேவைகளை குறித்த நிறுவனம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சேவையில் செஸ்னா 208 விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
எதிர்வரும் நவம்பரில் இருந்நு இந்த விமானசேவை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விமானங்கள் 2024 நவம்பர் 01 இல் இருந்து 2025 ஏப்ரல் 30ஆம் வரை செயற்படவுள்ளன.
குளிர்கால விடுமுறைக் காலத்தில் வெளிநாட்டுப் பயணிகளின் வருகையைக் கருத்தில் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கலாசார முக்கோணம் அல்லது மத்திய மலை நாட்டிற்கு விஜயம் செய்த பின்னர் இலங்கையின் தென் கரையோரத்தை பார்க்க விரும்புவோருக்கு, பயண நேரத்தைக் குறைக்கும் வகையில் இந்த உள்நாட்டு விமான சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த விமானங்கள், தண்ணீரில் இருந்து புறப்படுவதை உள்ளடக்கிய தனித்துவமான பயண அனுபவத்தையும் வழங்குவதாக சினமன் எயார் தெரிவித்துள்ளது.