தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் 473 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதனை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்(Joseph Stalin) தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பரீட்சை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 473 பேருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பரீட்சையில் முறைகேடு செய்பவர்களுக்கு ஒரே தண்டனை பரீட்சை மதிப்பீட்டுக்கு தடை விதிப்பதுதான் என அவர் தெரிவித்தார்.
அத்துடன் மாகாணக் கல்விப் பணிப்பாளர் அதிகாரங்களை வழங்கினாலும் சில குற்றச்சாட்டுகளுக்கு தண்டனைகள் மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்படாத நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் பரீட்சைகளை நம்பகத்தன்மையுடன் எதிர்கொள்ளும் திறன் இல்லாவிட்டால் பரீட்சை திணைக்களத்தின் செயற்பாடு என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை குறித்த பரீட்சை மீள நடத்தப்படமாட்டாது எனவும் வெளியான மூன்று வினாக்களுக்கு அனைத்து மாணவர்களுக்கும் சமமான புள்ளிகள் வழங்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று(14)தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.