பொதுக் கடனை நிர்வகிப்பதற்கான கடன் முகாமைத்துவ மென்பொருள் அமைப்பை (debt management software system) கொள்வனவு செய்ய உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பொதுநலவாய செயலகத்தால் வழங்கப்பட்ட பொதுநலவாய செயலக கடன் பதிவு மற்றும் மேலாண்மை அமைப்பையே தற்போது, இலங்கை அரசாங்கம் வெளிநாட்டுக் கடன் பதிவு மற்றும் கடன் மேலாண்மைக்கு பயன்படுத்துகிறது.
இந்த அமைப்பின் வருடாந்த உரிமத்தின் புதுப்பித்தல் மற்றும் நீடிப்பு தற்போது பொதுநலவாய செயலகத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்தே பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகம் மற்றும் உலக வங்கியின் தொழில்நுட்ப பிரதிநிதிகள் குழுவை நிறுவுவது தொடர்பாக சர்வதேச கண்காணிப்பு நிதியத்துடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்படி, பொதுநலவாய செயலகத்திடம் இருந்து பொதுநலவாய மெரிடியன் மென்பொருளை கொள்வனவு செய்வதற்கான பிரேரணைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.