வாட்ஸ் அப்பில் தொடர்புகளை சேமிக்கும் புதிய அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் விரைவில், பயனர்கள் WhatsApp இன் கிளவுட் சேமிப்பில் நேரடியாக தொடர்புகளை சேமிக்க முடியும்.
இதன் மூலம் அவர்களின் சாதனம் இழந்தாலும் அல்லது மாற்றப்பட்டாலும் அவை அணுக கூடியதாக இருக்கும்.
முன்னதாக ஆப்ஸில் சேமிக்கப்பட்ட புதிய தொடர்புகள் சாதனத்தின் உள்ளாகவே சேமிக்கப்பட்டன.
புதிய அம்சம் இந்த வரம்பை, பயனர்கள் வலை மற்றும் Windows க்கான WhatsApp உள்ளிட்ட எந்த சாதனத்திலும் தொடர்புகளை சேமிக்க அனுமதிப்பதன் மூலம் தீர்க்கிறது.
இவ் update காரணமாக WhatsApp இல் சேமிக்கப்பட்ட தொடர்புகள் அனைத்து இணைக்கப்பட்ட சாதனங்களிலும் அணுக கூடியதாக இருப்பதுடன்,WhatsApp பயனர் தரவுகளை பாதுகாக்க Identity Proof Linked Storage (IPLS) என்ற புதிய குறியாக்கப்பட்ட சேமிப்பு அமைப்பை செயல்படுத்தியுள்ளது.
Posted inசமூகம் செய்திகள் தொழில்நுட்பம்