சோள இறக்குமதி தொடர்பாக வெளியான தகவல்

சோள இறக்குமதி தொடர்பாக வெளியான தகவல்

இலங்கைக்கான சோள இறக்குமதி குறித்து விவசாய அமைச்சு (Ministry of Agriculture) முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது .

அதன்படி, அடுத்த வருடம் சோள இறக்குமதியை 150,000 மெற்றிக் தொன்களாக குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம் விக்ரமசிங்க (M.P.N.M Wickramasinghe) தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது வருடாந்தம் சுமார் 300,000 மெற்றிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சோள இறக்குமதிக்காக செலவிடப்படும் கணிசமான அந்நியச் செலாவணியை வெளியேற்றுவதைக் குறைக்கும் நோக்கில் இறக்குமதியை குறைக்கவுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

வெளிநாடுகளில் இருந்து விதைகளை இறக்குமதி செய்யாமல் உள்நாட்டிலேயே தேவையான விதைகளை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விக்ரமசிங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.