உலகின் மிகப் பெரிய கட்டடம் அமைக்கப்படும் இடம் எது தெரியுமா?

உலகின் மிகப் பெரிய கட்டடம் அமைக்கப்படும் இடம் எது தெரியுமா?

உலகின் மிகப்பெரிய பிரமாண்டமான நவீன நகர கட்டடம் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரசு அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் (Saudi Arabia) தலைநகர் ரியாத்தில் (Riyadh) 50 பில்லியன் டொலர் மதிப்பில் ‘முகாப்” என்ற பிரமாண்டமான கட்டடம் அமைக்கப்பட உள்ளது.

சவுதி அரேபியாவின் நியூ முராபா டெவலப்மென்ட் கம்பெனி என்று நிறுவனம் இந்த முகாப் (Mukaab) கட்டடத்தின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள உள்ளது.
இத்திட்டமானது 2.5 கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருக்கும் என்று அதன் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 1,04,000 குடியிருப்புகள், 9,000 விடுதி அறைகள் அமைய உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் அருங்காட்சியகம், தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம், தியேட்டர் மற்றும் 80துக்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார மையங்கள் ஆகியவை கொண்டதாக கூறப்படுகிறது.

நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் பில்டிங்கை போட 20 மடங்கு பெரிய கட்டிடமாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது

புதிய நகரின் கட்டுமான பணிகள் 2030ஆம் ஆண்டிற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.