2024 சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

2024 சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

2024 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை இன்று (நவம்பர் 5) முதல் நவம்பர் 30 வரை இணையதளத்தில் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அறிவிப்பின் படி, அனைத்து பாடசாலை விண்ணப்பதாரர்களும் தங்கள் அதிபர் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். தனியார் விண்ணப்பதாரர்கள், உரிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றி தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். தனியார் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தேசிய அடையாள அட்டை (NIC) மூலம் பரீட்சைக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். NIC இல்லாத தனியார் விண்ணப்பதாரர்கள் தங்கள் பாதுகாவலரின் (தாய் அல்லது தந்தை) NIC ஐப் பயன்படுத்தி பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முன் www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஆகிய உத்தியோகபூர்வ இணையதளங்களில் உள்ள அறிவுறுத்தல்களை கவனமாகப் படிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.