Whatsapp இன் புதிய அப்டேட்

Whatsapp இன் புதிய அப்டேட்

வாட்ஸ்அப் பயனர்கள் “நண்பர்கள்” மற்றும் “குடும்பம்” போன்ற பிரிவுகளாக சேட்களை தனித்தனியாகப் பிரித்து ஒழுங்கமைக்க உதவும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் 2 பில்லியனுக்கு மேற்பட்டோர் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இணையம் வழியாக இலவசமாக குறுஞ்செய்தி அனுப்புதல், அழைப்புகள், பணப்பரிமாற்றம் போன்ற வசதிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்துவதன் மூலம் பயனர் அனுபவத்தை மேம்படுத்தி வருகிறது. தற்போது வாட்ஸ்அப், சேட்களை எளிதாக ஒழுங்கமைக்கும் வசதியை வழங்கியுள்ளது. இதற்கு முன்பு, பயனர்கள் சேட்களை “அனைத்தும்,” “படிக்காதவை,” மற்றும் “குழுக்கள்” என மூன்று பிரிவுகளில் மட்டும் வடிகட்ட முடிந்தது.

இந்த புதிய அப்டேட்டின் மூலம், பயனர்கள் தங்களுக்குத் தேவையான தனிப்பட்ட பட்டியல்களை உருவாக்கலாம். குடும்பம், நண்பர்கள், அலுவலகம் போன்ற தனித்தனி பட்டியல்களை உருவாக்கி, அங்கு சேர்க்க வேண்டிய நபர்களை அல்லது குழுக்களை எப்போதும் இணைக்கவோ நீக்கவோ செய்யலாம். அதிகபட்சம் 20 தனிப்பயன் பட்டியல்கள் வரை உருவாக்க முடியும். இது வணிகத் தொடர்பான உரையாடல்களை நிர்வகிக்க மிகவும் உதவியாக இருக்கும். எடுத்துக்காட்டாக, வணிகங்கள் வாடிக்கையாளர் கேள்விகள், ஆர்டர் கண்காணிப்பு, ஊழியர்களுடன் உரையாடல் போன்ற பிரிவுகளுக்குப் பதிலாக தனிப்பட்ட பட்டியல்களை உருவாக்கலாம்.

இந்த அப்டேட் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது, மேலும் சில வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.