இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து பணியாளர்களாக வெளிநாடு சென்றுள்ள பெற்றொர்களின் பிள்ளைகளுக்கு வழங்கும் புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் 2024ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
இவ் விண்ணப்பங்கள் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் மாணவர்கள், கல்வி பொது தராதர சாதாரண தர மற்றும் கல்வி பொது தராதர உயர் தர மாணவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரியின் பரீட்சைத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட சான்றுதழின் மற்றும் பிறப்புச் சான்றுதழ் என்பவற்றின் பிரதியை விண்ணப்பதாரி கல்வி பயிலும் பாடசாலை அதிபர் மூலம் சான்றுப்படுத்தி “முகாமையாளர் (நலன்புரி ), இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இல 05ம் மாடி, தொழில் அமைச்சு, மெஹேவர பியஸ, நாராஹேன்பிட்டிய” முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்புவதுடன் பணியக இணையதளத்தினூடாக (https://services.slbfe.lk/OnlineWelfare/index?%22) பதிவேற்றம் செய்யும் போது பெறப்படும் தொடர் இலக்கத்தை ஆவணத்தின் வலது பக்க மேல் மூலையில் குறிப்பிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் விண்ணப்பங்கள் 2024.12.31 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்பதுடன் உதவித் தொகைக்கு ஒரு தடவை மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.