ஐக்கிய நாடுகள் அமைப்பினால் 1993 ஆம் ஆண்டு உலக நீர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டதுடன் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் திகதிஉலகெங்கிலும் உலக நீர் தினம் கொண்டாடப்படுகின்றது.
உலக நீர் தினத்தை முன்னிட்டு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நாடளாவிய ரீதியிலான பாடசாலை போட்டிகளை தயார் செய்துள்ளது. இதில் கட்டுரை மற்றும் சித்திர போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.
கட்டுரை மற்றும் சித்திர போட்டிகளின் தலைப்புகளாக
- நீர் மற்றும் சுகாதாரம்
- நீர் மற்றும் மனித தர்மம்
- நீர் பாதுகாப்பு
- நீர் மற்றும் மதிப்புக்கள் ஆகியன காணப்படுகின்றன.
கட்டுரை போட்டியில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 350 சொற்களுக்கு மேற்படாது தமது ஆக்கங்களை கனிஷ்ட மற்றும் சிரேஸ்ட பிரிவுகளில் சமர்ப்பிக்க முடியும்.
சித்திர போட்டியில் அக்கம் 17-23 அளவுள்ள தாளினை பயன்படுத்த வேண்டும். எந்தவொரு வர்ண ஊடகத்தையும் பயன்படுத்த முடியும். கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகளில் பங்குபற்ற முடியும்.
தரம் 4 முதல் வரை கனிஷ்ட பிரிவு எனவும் தரம் 9 மற்றும் அதற்கு மேல் சிரேஷ்ட பிரிவு எனவும் கருதப்படும் நிபுணத்துவம் பெற்ற நடுவர் ஊடாகவே வெற்றியாளர்கள்கள் தெரிவுசெய்யப்படுவர். நடுவர் குழாமின் முடிவே இறுதி முடிவாகும்.
போட்டியின் முதலாம் பரிசு 15000/=, இரண்டாம் பரிசு 10000/= மற்றும் மூன்றாம் பரிசு 7500/= ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியாளர்கள் தமது ஆக்கங்களை 2025 ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் கூட்டு தொடர்பாடல் பிரிவு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, த. பெ. இல 14, காலி வீதி, இரத்மலானை என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.