இலங்கையின் கிழக்கு கடற்கரையை அண்மித்த பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நவம்பர் 23ஆம் தேதியன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்பின், அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இந்த அமைப்பு மேலும் தீவிரமடைந்து இலங்கையின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரக்கூடும் என்றும் அது மேலும் கூறியுள்ளது.
இதன்படி, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் செயற்படும் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் மற்றும் குறிப்பாக கிழக்கு மற்றும் வடமாகாணங்களில் வசிக்கும் பொதுமக்களும் இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.