பழங்குடியின மக்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒப்புதல்

பழங்குடியின மக்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒப்புதல்

காடுகளுக்குள் நுழைய பழங்குடியின மக்களுக்கு அடையாள அட்டை வழங்க வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம் முடிவு செய்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட காடுகளுக்குள் நுழையும் போது வன பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாக ரதுகல பழங்குடியின தலைவர் டானிகல மஹாபந்தலகே சுடவன்னில தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாடு காரணமாக பழங்குடியின மக்கள் வனப்பகுதிக்குள் நுழைவதற்கு சட்டப்பூர்வ அடையாள அட்டை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக ரதுகல மற்றும் தம்பன பழங்குடியினருக்கான அடையாள அட்டைகள் வழங்கப்படும் எனவும், பழங்குடியின தலைவர்கள் வழங்கும் பட்டியலின் பிரகாரம் அடையாள அட்டைகள் வழங்கப்படும் எனவும் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.