இஸ்ரேலில் விவசாய கைத்தொழில் துறையில் 2,252 இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செப்டெம்பர் 12 மற்றும் 18 ஆம் திகதிகளில் இஸ்ரேல் செல்லவிருந்த 69 இளைஞர்களுக்கு நேற்றுமுன்தினம் (09) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் விமான டிக்கெட்டுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இஸ்ரேலில் வேலைகளுக்காக இலங்கை மக்களை லாட்டரி முறையின்படி இஸ்ரேலின் FIBA ஆல் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவு செய்யப்படும் நபர்களின் மேலதிக பணிகள் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் இஸ்ரேலுக்கு பணிக்கு அனுப்பப்படுவார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இலங்கை இளைஞர்களுக்கு 5 வருடங்கள் 5 மாத காலத்திற்கு இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.