மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான வலயமட்ட Robotics மற்றும் புத்தாக்க போட்டி இன்று காலை 10 மணி முதல் மட்/மமே/குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலய பிரதான மட்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் திட்டமிடலுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் மதிப்பிற்குரிய Y.C. சஜீவன் ஐயா அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இப் போட்டி நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் மதிப்பிற்குரிய யோ. ஜெயச்சந்திரன் ஐயா உட்டப வலய மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலத்திற்குப்பட்ட மாணவர்களால் உருவாக்கப்பட்ட 70 க்கு மேற்பட்ட கண்டுபிடிப்புக்கள் 10 பிரிவுகளின் கீழ் போட்டியில் பங்கேற்றதுடன் ஒரு பிரிவிலிருந்து ஒரு கண்டு பிடிப்பு வீதம் தெரிவு செய்யப்பட்டு மாகாண மட்டப் போட்டியில் போட்டியிட அனுப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 4 கண்டுபிடிப்புக்கள் மாகாணத்தில் தெரிவாகி தேசிய மட்டத்தில் போட்டியிட்டிருந்தமை சிறப்பம்சமாகும் இம் முறையும் எமது மாணவர்களின் கண்டு பிடிப்புக்கள் தேசிய மட்டம் வரை சென்று வெற்றி வாகை சூட வாழ்த்திகிறோம்.