இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு புதிய விதிமுறைகளை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இன்றைய காலத்தில் இன்ஸ்டாகிராம் பாவனையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அதிலும் 18 வயதுக்கு கீழ் இருக்கும் சிறுவர், சிறுமியர்களும் தற்போது இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பெற்றோர்களுக்கு பெரும் கவலைகள் ஏற்பட்டுள்ளதுடன், சிறுவர், சிறுமிகளும் சில தவறான பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர்.
இத்தருணத்தில் மெட்டா நிறுவனம் அதிரடியான முடிவு ஒன்றினை வெளியிட்டுள்ளதுடன், விதிமுறைகளையும் மாற்றியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் மெட்டா நிறுவனம் கூறியுள்ளதை தெரிந்து கொள்வோம். 18 வயதிற்கு கீழ் இறுக்கும் பயனர்களின் இன்ஸ்டா கணக்குகளுக்கு, சில மேம்படுத்தப்பட்ட தனியுரிமை மற்றும் Parental Guidanceகளை அமைத்துள்ளது.
இந்த வயதுக்குட்பட்ட பயனர்களின் கணக்குகள் தானாகவே “டீன் அக்கவுண்ட்ஸ்” என்ற நிலைக்கு போர்ட் செய்யப் படுமாம். இது இயல்பாகவே பிரைவேட் கணக்குகளாக இருக்கும் என்று அந்த நிறுவனம் இன்று செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறித்த பயனர்கள் அவர்களை பின்தொடரும் அல்லது ஏற்கனவே இணைப்பில் இருப்பவர்களின் கணக்குகளிடமிருந்து மட்டுமே மெசேஜ் பெற முடியுமாம். அதுமட்டுமல்லாமல் 16 வயதிற்குட்பட்ட பயனர்கள், பெற்றோரின் அனுமதியுடன் மட்டுமே இயல்புநிலை அமைப்புகளை தங்களது இன்ஸ்டா கணக்கை மாற்ற முடியும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் யாருடன் பேசி பழகுகிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும், இன்ஸ்டாகிராம் கணக்கை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும் உரிமை பெறுவார்களாம். இதன் முடிவில் இளம்பயனர்கள், அதிக மனச்சோர்வு, பதட்டம் மற்றும் கற்றல் குறைபாடு இவற்றிலிருந்து தடுக்கமுடியும்.
மேலும் குறித்த பயனர்கள் ஒவ்வொரு நாளும் 60 நிமிடங்களுக்கு பின்பு இன்ஸ்டா கணக்கின் பயன்பாட்டை மூடுவிடுவதற்கு அறிவிக்கப்படும். இதுமட்டுமின்றி இரவு நேரங்களில் இன்ஸ்டாகிராம் தானாகவே ஸ்லீப் மோடிற்கு சென்றுவிடும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.