பனை (Palmyra)

பனை (Palmyra)

பனை எமது வடகிழக்கு பிரதேசங்களில் அதிகளவாக காணப்படுகின்ற கற்பகத்தரு மரமாகும். இதனைப் பற்றி நாம் அனைவரும் நிறையவே அறிந்து வைத்துள்ளோம். இது ஆபிரிக்காவினை தாயகமாக கொண்டிருந்தாலும் தற்போது இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, மியான்மார், தாய்லாந்து போன்ற நாடுகளிலேயே அதிக அளவாக காணப்படுகின்றது.
இந்த பனை மரமானது பல வகையாக உள்ளது.

அவற்றிலே

1. ஆண் பனை, 2. பெண் பனை, 3. கூந்தப்பனை, 4. தாளிப்பனை, 5. குமுதிப்பனை, 6.சாற்றுப்பனை, 7. ஈச்சம்பனை, 8. ஈழப்பனை, 9. சீமைப்பனை, 10. ஆதம்பனை, 11. திப்பிலிப் பனை , 12. உடலற்பனை, 13. கிச்சிலிப்பனை, 14. குடைப்பனை, 15. இளம்பனை, 16. கூறைப்பனை, 17. இடுக்குப்பனை, 18. தாதம்பனை, 19. காந்தம்பனை , 20. பாக்குப்பனை, 21. ஈரம்பனை, 22. சீனப்பனை, 23. குண்டுப்பனை, 24. அலாம்பனை, 25. கொண்டைப்பனை, 26. ஏரிலைப்பனை, 27. ஏசறுப்பனை, 28. காட்டுப்பனை, 29. கதலிப்பனை, 30. வலியப்பனை, 31. வாதப்பனை, 32. அலகுப்பனை, 33. நிலப்பனை, 34. சனம்பனை என பல்வேறுவகை காணப்படுகின்றது.

நாங்கள் கூர்ந்து கவனித்தோம் என்றால் இந்தப் பனை மரங்கள் காடுகளிலேயே வளர்வதை விட மனிதர்கள் வாழும் இடங்களிலேயே அதிகளவு காணப்படுகின்றது. அத்தோடு அதன் மூலம் பல்வேறு பயன்பளையும் நாம் பெறுகின்றோம்.
• பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதனீரைத் தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வியர்குரு நீங்கும்.
• தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.
• பனங்கற்கன்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.
• பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு. இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தால் உடல் அழகும்இ பலமும் அதிகரிக்கும்.
• பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தத இதனை சுட்டு சாப்பிடலாம்.
• பனையில் இருந்து கிடைக்கும் பொருட்கள் உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பதுஇ துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது
• பனை நுங்கு கோடை காலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது.
உணவுக்காக மட்டுமன்றி பனையிலிருந்து பல பொருட்களை உற்பத்தி செய்யலாம் அதாவது பனந்தும்பு, தூரிகைகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் என பல்வேறு வகையில் பயன்படுகிறது.

மட்டக்களப்பு பிரதேசத்திலும் பல்வேறு கிராமங்களில் அதிகளவான பனை மரங்களை காணக்கூடியதாக உள்ளது. அத்தோடு இந்த பானை மரத்திலிருந்து பனையோலை மூலம் பெருமளவான உற்பத்தி பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்களை நாங்கள் காணக்கூடியதாக உள்ளது.


உற்பத்தி செய்பவர்களை சந்திக்கும்போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளாக தற்போது பனை மரங்கள் காணப்படும் நிலங்கள் உரிமையாளர்களால் எல்லையிடப்படுவதன் காரணமாகவும்இ வேறு தேவைகளுக்காகவும்இ குடியேற்றங்களாகவும் நிலங்கள் பயன்படுத்தப்படுவதால் பனைமரங்கள் அழிக்கப்படுகின்றது. இவற்றினால் இயற்கையாக கிடைக்கும் மூலப்பொருளிற்கு பணத்தை கொடுத்து பெற்றுக் கொள்ளும் நிலையும் காணப்படுகின்றது.


அவர்களுக்கு உற்பத்தி சம்பந்தமான பயிற்சிகள் ஒரளவு கிடைக்கப் பெற்றாலும் அவற்றை சந்தைப்படுத்துவதற்கான வசதிகள் குறைவாகவும்இ சந்தைப்படுத்தலுக்கான உரிய வழிகளை அவர்கள் அறியாமையும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாக உள்ளது. குறிப்பாக இவர்களை உற்பத்தி பொருட்களை இலங்கை பனை அபிவிருத்தி சபை கொள்வனவு செய்கின்றனர். ஆனால் குறிப்பிட்ட அந்த பொருட்களுக்கான பணத்தினை கொடுப்பதற்கு கால தாமதம் ஆவதோடு, உரிய பெறுமதியும் கிடைப்பதில்லை போன்ற சிக்கல்கள் காணப்படுவதை காணக்கூடிய உள்ளது.

இதன் காரணமாக அந்த உற்பத்தியாளர்கள் அந்த உற்பத்தி பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கு ஆர்வமில்லாமல் காணப்படுகின்றனர். ஒரு சிலர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக உற்பத்தி செய்து அதற்கு உடனடியான பணத்தினை பெற சில தனியாரிடம் குறைந்த பெறுமதிக்கு அவற்றை விற்பனை செய்கின்றனர்.
இவற்றிற்கான தீர்வாக நாங்கள் இவ்வாறான சிறு கைத்தொழில் செய்யும் இந்த நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களில் உள்ளவர்களை ஊக்குவிப்பதற்காக அவர்கள் உற்பத்திப் பொருட்களை நீங்கள் கொள்வனவு செய்வதோடு, உங்களுக்குத் தெரிந்த வகையில் சந்தைப்படுத்த கூடிய வழி வகைகளை அவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கலாம். இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு எம்மாலான உதவியினை வழங்கி எமது பின்தங்கிய சமூகத்தின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த பயனிப்போமாக.

Written By :
K. Pratheeswaran ,
Director,
Vivekananda College of Technology.