அரச மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களை குறிவைத்து பணமோசடி

அரச மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களை குறிவைத்து பணமோசடி

வங்கி கணக்குகளை வைத்திருப்பவர்களை குறிவைத்து ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலொன்று பணமோசடியில் ஈடுபட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தமது கணக்குகளில் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் எட்டு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அரச மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களை ஏமாற்றி அவர்களின் கணக்குகளில் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ளும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

45-50 வயதுக்கு மேற்பட்ட, கணினி தொழில்நுட்பம் பற்றி அதிகம் அறிந்திராதவர்களை, இந்த குழு குறிவைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல், முதலில் தொலைப்பேசி எண்ணைக் கண்டுபிடித்து, பரிசு வழங்குவதாக அடையாள அட்டை எண் மற்றும் கணக்கு எண்ணைப் பெற்று,தொலைப்பேசி எண்ணில், இரகசிய எண்ணைப்பெற்று (OTP) மோசடியில் ஈடுபடுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.