வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை முக்கிய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

1 min read
💬 0

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் நிலவும் தளம்பல் நிலை, அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (11) தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

இதேவேளை நாடு முழுவதும் மேகமூட்டமான வானிலை காணப்படும்.

மேல், சபரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல் மற்றும் வட மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்