மட்டக்களப்பு கரடியனாறு பாடசாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான Career Guidance Program 19.05.2026 அன்று நடைபெற்றது.
மாணவர்கள் தங்களுடைய கல்வி, திறமை மற்றும் விருப்பம் (interest) ஆகியவற்றின் அடிப்படையில் சரியான career தேர்வை செய்ய உதவும் வகையில் இந்த Career Guidance Program ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் தொழிற்பயிற்சி முகாமையாளர் திரு. சார்ல்ஸ் கிரேசியன் அவர்களால் நடத்தப்பட்டது.
HRDO திரு. அகிலன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வின் மூலம் மாணவர்கள் தவறான career தேர்வுகளை தவிர்த்து, எதிர்காலத்தில் சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கான வழிகாட்டுதலையும் பெற்றனர். மேலும், அவர்களிடையே தன்னம்பிக்கை (confidence) மற்றும் தெளிவான career திசை (direction) உருவாகும் வாய்ப்பும் அதிகரித்தது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.