அஸ்வெசும கொடுப்பனவு புதுப்பித்தல் தொடர்பான அறிவித்தல் முக்கிய செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவு புதுப்பித்தல் தொடர்பான அறிவித்தல்

1 min read
💬 0

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற்கட்ட தகவல் புதுப்பித்தல் செயல்முறைக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, குறித்த பணிகள் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தரவு சேகரிப்புப் பணியின் ஒரு பகுதியாக, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அதிகாரிகள் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள் என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, அந்தத் திகதிக்கு முன்னர் தமது வீடுகளுக்கு வருகை தரும் கணக்கெடுப்பு உத்தியோகத்தர்களுக்கு சரியான தகவல்களை வழங்கி தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு நலன்புரி நன்மைகள் சபை சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அஸ்வெசும மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் செயற்பாட்டின் போது தவறான தகவல்களைச் சமர்ப்பிக்கும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அமைச்சு எச்சரித்துள்ளது.

மேலும், நலத்திட்ட உதவிகளைப் பெறும் நோக்கத்தில் தவறான அல்லது திசைதிருப்பும் தகவல்களை வழங்குவது நலத்திட்ட உதவிகள் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும் என்றும், குற்றவாளிகளுக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்