Berendina Development Service நிறுவனத்தின் ஏற்பாட்டில் பயிலுனர்களுக்கான “Trainees Development Workshop” விவேகாநந்த தொழில்நுட்ப கல்லூரியில் 21.05.2026 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வு பயிலுனர்களின் தனிநபர் திறன்கள், குழு ஒருங்கிணைப்பு மற்றும் எதிர்கால இலக்குகளை மேம்படுத்தும் நோக்கில் கல்லூரியினால் ஒழுங்குபடுத்தப்பட்டது.
இதன்போது life experience மற்றும் success stories என்பன பகிரப்பட்டதுடன், பயிலுனர்களுக்கான விசேட Motivational பயிற்சி வழங்கப்பட்டது.
மேலும், வெளிப்புற குழு செயற்பாடுகள் மற்றும் விளையாட்டுகள் மூலம் குழு ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் இணைந்து செயல்படும் திறன்கள் மேம்படுத்தப்பட்டன.
பின்னர், பயிற்சி பெறுநர்கள் சிறிய குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, “எதிர்கால இலக்குகள்”, “அவற்றை அடையக்கூடிய வாய்ப்புகள்” மற்றும் “எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள்” போன்ற தலைப்புகளில் கலந்துரையாடி தங்களது கருத்துகளை விளக்கமாக வழங்கினர்.
நிகழ்வின் இறுதியில், பயிற்சி பெறுநர்கள் தங்களது அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இதன்போது வளவாளராக திரு. ராஜீ கெப்ரியல் அவர்கள் கலந்துகொண்டு பயிலுனர்களுக்கான வழிகாட்டல்களை வழங்கினார்.
இந்த செயலமர்வு பயிற்சி பெறுநர்களின் தலைமைத்துவ திறன், தொடர்புத்திறன் மற்றும் எதிர்கால நோக்கத்தை வளர்க்கும் பயனுள்ள முயற்சியாக அமைந்தது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.