செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சிரமதான நிகழ்வு முக்கிய செய்திகள்

செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சிரமதான நிகழ்வு

1 min read
💬 0

ஒரு தசாப்தங்களுக்கு மேலாக தன் சேவையினை சிறப்பாக மட்டக்களப்பில் வழங்கி வரும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது தேவைப்பாடுடைய மாணவர்களை கல்லூரியினுள் உள்வாங்கி அவர்களையும் சமூகத்தில் கல்வி அறிவுடயவர்களாக மாற்றி வருகின்றது.

இவ்வாறு தனது சேவையை சிறப்பாக வழங்கும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது சமூகத்தில் தொழில்கல்வியில் மாத்திரமின்றி பல முன்னுதாரணமான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றது.

இவை மட்டுமின்றி மாணவர்களை சமூகத்துடன் இணைத்து எதிர்காலத்தில் சமூகத்தினுள் நுழையவுள்ள இளைஞர் யுவதிகளின் பண்புகளை மேம்படுத்தி சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்பும் வண்ணம் பல சேவைகளை வழங்கி வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக 27.05.2026 அன்று செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சிரமதான நிகழ்வு கல்லூரி பயிலுனர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது சமூக நலன்புரி அமைப்பின் உத்தியோகஸ்தர்கள், கல்லூரியின் ஊழியர்கள் மற்றும் பயிலுனர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சிரமதான நிகழ்வு
செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சிரமதான நிகழ்வு
செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சிரமதான நிகழ்வு
செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சிரமதான நிகழ்வு
Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்