மாவட்டம் தாண்டிய விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் சேவை முக்கிய செய்திகள்

மாவட்டம் தாண்டிய விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் சேவை

1 min read
💬 0

பதுளை சென். ஜேம்ஸ் தமிழ் மகாவித்தியாலயத்தில் 25/05/2026 அன்று மாணவர் தலைவர்களுக்கான Life Skill Program விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் நடைபெற்றது.

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது மட்டக்களப்பு மண்ணில் தசாப்தம் கடந்த சேவையை முன்னெடுத்து வரும் நிலையில், கல்லூரியின் வளர்ச்சியின் ஒரு மைல் கல்லாக வெளி மாவட்டங்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழில் கல்வி தேவைப்பாடுடையோரை அடையாளம் கண்டு Life Skill Program மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் பதுளை மாவட்டத்தில் உள்ள சென்.ஜேம்ஸ் தமிழ் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் தொழிற்பயிற்சி முகாமையாளர் திரு. சார்ல்ஸ் கிரேசியன் மற்றும் கல்லூரியின் முதல்வர் திரு. த. சந்திரசேகரம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை மேற்கொண்டதுடன், மாணவர்களுக்கு விளையாட்டுகள் மற்றும் செயன்முறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

தற்காலத்தில் மாணவர்களை வழி தவற வைக்கும் மற்றும் திசை திருப்பும் பல முயற்சிகளில் பல்வேறுபட்ட தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான சூழலில் சிக்கியுள்ள எமது எதிர்கால சந்ததியினருக்கு கல்வி அறிவு மாத்திரமல்லாது வாழ்க்கையின் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான செயற்பாடுகள் கல்லூரியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.

மாவட்டம் தாண்டிய விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் சேவை
மாவட்டம் தாண்டிய விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் சேவை

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்