கல்லூரியின் Staff Development Program முக்கிய செய்திகள்

கல்லூரியின் Staff Development Program

1 min read
💬 0

தற்காலத்தில் இளைஞர்கள் வேகமாகத் தங்கள் வாழ்க்கையில் அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும், அனைத்து விடயங்களும் இலகுவாகவும் தங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் உடனடியாகவும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் உள்ளனர். அவ்வாறு இந்த வேகமான தொழில்நுட்ப யுகத்தில் தங்களுடைய தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படாமல் போகும் பட்சத்தில் தவறான முடிவுகளை எடுத்து தங்களை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு பலவீனமாக காணப்படுகின்றனர்.

இந்த நிலையில் இவ்வாறான நிலைப்பாடுடைய இளைஞர் யுவதிகளுடைய மனநிலையைப் புரிந்து, அவர்களுடைய எண்ண ஓட்டங்களுக்குள் ஊடுருவி அதனை எவ்வாறு கையாண்டு இளைஞர்களை நல்வழிப்படுத்துவது என்று தற்கால ஆசிரியர்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது.

அந்த வகையில் விவேகானந்த தொழில்நுட்பவியல் பயிலுனர்களும் அதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல என்ற அடிப்படையில், கல்லூரியின் பயிலுனர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களை மேம்படுத்துவதற்காக கல்லூரியினால் ஊழியர்களுக்கான Staff Development Program நடைபெற்றது.

29.05.2026 அன்று விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் அனைத்து கிளைகளிலும் உள்ள கல்விசார் ஊழியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டது.

நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வளவாளராக திரு.அழகையா ஜெகநாதன் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கி வைத்தார்.

மேலும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் அதிபர் திரு. த. சந்திரசேகரம், செயற்றிட்ட முகாமையாளர் திருமதி ஹ. கிந்துஜா, கல்லூரியின் புதுக்குடியிருப்பு கிளையின் வளவாளர்கள் மற்றும் ஊழியர்கள், கொம்மாதுறை கிளையின் வளவாளர்கள் மற்றும் ஊழியர்கள்,காரைதீவு சமுதாய கல்லூரியின் பயிற்றுவிப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டதுடன், செயலமர்வில் வழங்கப்பட்ட பயிற்சிகளில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கல்லூரியின் Staff Development Program

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்