பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை
நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் இன்று (20) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதன்படி, இன்று மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெய்யும்.
மேலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவ வாய்ப்பிருந்தாலும், சில பகுதிகளில் மாலையில் மழை பெய்யக்கூடும்.
அதன்படி, பிற்பகல் 2.00 மணிக்கு மேல் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.