கடல் உணவு என்று சொன்னாலே நம் நினைவிற்கு வருவது மீன் தான். ஆனால் மீனை போலவே ருசியான கடல் உணவு ஒன்றும் உள்ளது, அது நண்டு தான். நண்டின் ஓடு எவ்வளவு கடினமாக இருந்தாலும் உள்ளே உள்ள சதையானது மிகவும் சுவையாக இருக்கும்.
அதன் காரணத்திற்காகவே எவ்வளவு கஷ்டம் என்றாலும் பலர் அதை விரும்பி வீட்டில் வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள். அந்தவகையில் இங்கே நாம் பார்க்கப்போகும் ரெசிபியானது வீடே மணக்கும் வகையில் நண்டு மசாலா குழம்பு எப்படி செய்வது என்று தான்…
செய்முறை :
நண்டு மாரினேட் செய்ய தேவையானவை :
- நண்டு – 18 முதல் 10
- மஞ்சள் – 1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- உப்பு – சிறிதளவு
குழம்பு வைக்க தேவையானவை :
- பெரிய வெங்காயம் – 2
- தக்காளி – 3
- பச்சை மிளகாய் – 1
- துருவிய தேங்காய் – 1/2 கப்
- இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- கொத்தமல்லி தூள் – 1 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் – 2 டீஸ்பூன்
- கருப்பு மிளகு – 2 டீஸ்பூன்
- பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
- எண்ணெய் – 3 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை :
நண்டுகளை நன்றாக அலசி அதன் நெறிகளை முழுதாகவோ அல்லது இரண்டு துண்டுகளாகவோ உடைத்து அதன் கால்களையும் தனியாக உடைத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து 15 – 20 நிமிடங்கள் மூடி போட்டு ஊற வைக்கவும்.
அடுத்து மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து பிறகு அதில் துருவிய தேங்காய், கருப்பு மிளகு மற்றும் பெருஞ்சீரகம் போட்டு நன்றாக பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
தற்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கி அதில் அரைத்து வைத்துள்ளதை போட்டு நன்றாக கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.
இதன் மேல் எண்ணெய் பிரிந்து வந்ததும் சுவைக்கேற்ப உப்பு, கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து சமைக்கவும்.
ஒரு கொதி வந்தவுடன் மாரினேட் செய்த நண்டு துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து நண்டு மசாலா குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி 20 நிமிடங்களுக்கு மிதமான தீயில் சமைக்கவும்.
இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை போட்டு இறக்கினால் சுவையான நண்டு மசாலா குழம்பு சாப்பிட ரெடி. இதை சூடான சாப்பாட்டில் போட்டு பிரட்டி சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.