Asset-Based Community Development (ABCD) செயலமர்வு
சமூகங்களில் காணப்படும் வளங்கள், திறன்கள் மற்றும் மனித வளங்களை அடிப்படையாகக் கொண்டு நிலையான சமூக அபிவிருத்தியை உருவாக்கும் நோக்கில் Asset-Based Community Development (ABCD) தொடர்பான செயலமர்வு 01.07.2026 அன்று மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது.
விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் டிஜிட்டல், தொழிற்கல்வி மற்றும் கிளை நிலையங்களின் பணியாளர்கள் ஒன்றிணைந்து, தங்களிடையே உள்ள திறன்கள், அனுபவங்கள் மற்றும் வளங்களை அடையாளம் கண்டு அவற்றை சமூகத்தின் தேவைகளுடன் இணைக்கும் நோக்கில் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இதன்போது, சமூகத்தில் காணப்படும் குறைபாடுகளை மட்டுமே மையப்படுத்தாமல், ஏற்கனவே உள்ள மனித வளங்கள், திறமைகள் மற்றும் சமூகச் சொத்துக்களை பயன்படுத்தி நிலையான மாற்றங்களை உருவாக்கும் Asset-Based Community Development (ABCD) அணுகுமுறை குறித்து விரிவாக விளக்கப்பட்டது. மேலும், தனிநபர் மைய சிந்தனையிலிருந்து (Ego System) ஒருங்கிணைந்த சமூக மைய சிந்தனை (Eco System) நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.




செயன்முறைப் பயிற்சிகள், குழுக் கலந்துரையாடல்கள் மற்றும் அனுபவப் பகிர்வுகள் ஊடாக, சமூக வளங்களை அடையாளம் காணுதல், அவற்றை ஒருங்கிணைத்தல் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக திறம்பட பயன்படுத்துதல் தொடர்பான வழிமுறைகள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டன.
விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி சமூக வலுவூட்டல், இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் நிலையான சமூக அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு இவ்வாறான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு செயலமர்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.




மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.