“AI for Office Productivity” எனும் தலைப்பில் சிறப்பு AI செயலமர்வு
எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் கொம்மாதுறை கிளையின் ஊடாக தொழில்நுட்ப அறிவையும், நவீன அலுவலக உற்பத்தித்திறனையும் மேம்படுத்தும் நோக்கில், செங்கலடி பிரதேசத்தின் களுவங்கேணியில் அமைந்துள்ள EBPM Child Development Center இன் ஊழியர்களுக்கு “AI for Office Productivity” எனும் தலைப்பில் சிறப்பு AI செயலமர்வு 2026 July 10 ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது.
இச்செயலமர்வில் மொத்தம் 27 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்தி அலுவலகப் பணிகளை எவ்வாறு விரைவாகவும் திறமையாகவும் மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாக விரிவான விளக்கங்களைப் பெற்றனர்.
பயிற்சியின் போது ஆவணத் தயாரித்தல், மின்னஞ்சல் மேலாண்மை, தரவு பகுப்பாய்வு, உள்ளடக்க உருவாக்கம், நேர மேலாண்மை மற்றும் தினசரி அலுவலக பணிகளில் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து செயன்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.