ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை முக்கிய செய்திகள்

ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை

1 min read
💬 0

ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை

வானிலை மையம் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதன்படி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெப்பக் குறியீடு ‘எச்சரிக்கை’ நிலையை எட்டக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித உடல் உணரும் வெப்பநிலையைப் பிரதிபலிக்கும் வெப்பக் குறியீடு, இந்த மாவட்டங்களின் சில பகுதிகளில் எச்சரிக்கை தேவைப்படும் அளவிற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே,பொதுமக்கள் போதிய அளவு நீர் அருந்துமாறும், நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அத்துடன் , பகல் நேரங்களில் கடினமான வெளிப்புற வேலைகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.