நாட்டின் நுகர்வோர் விலைச் சுட்டெணில் ஏற்றப்பட்டுள்ள மாற்றம் குறித்து சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2024 ஆகஸ்ட் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய ஆகஸ்ட் 2024 இல் 0.5 சதவீதமாக இருந்த பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.5 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆகஸ்ட் 2024 இல் 0.8 சதவீதமாக பதிவான உணவு வகை பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.3 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
மேலும், 2024 ஓகஸ்ட் 0.4 சதவீதமாக இருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.5 சதவீதமாக குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.