விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் பயிற்சி நெறிகளுக்கான Orientation நிகழ்வு

1 min read
💬 0

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் பயிற்சி நெறிகளுக்கான Orientation நிகழ்வு

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் பல்வேறு பயிற்சி நெறிகளுக்கான Orientation நிகழ்வு 14.09.2026 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் 30 இற்கும் மேற்பட்ட பங்காளர்கள் கலந்துகொண்டதுடன், அவர்களுடைய பெற்றோரும் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.

இதன்போது, ICT NVQ Level 3, NVQ Level 4 Network, CareerFit and IT, AI Prompt Engineering, ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய பயிற்சி நெறிகள் தொடர்பான அறிமுகம் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்விற்கான வளவாளராக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் Training Officer Pranavan கலந்துகொண்டு பயிற்சி நெறிகள் தொடர்பான விளக்கங்களை வழங்கினார்.

இளைஞர்களின் கல்வி, தொழில்நுட்ப அறிவு மற்றும் தொழில் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு தொழிற்பயிற்சிகள், தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும் தொழில் வழிகாட்டல் சேவைகளை விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி தசாப்தம் கடந்து தொடர்ந்து வழங்கி வருகிறது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்