பிரேக்கிங்

முக்கிய செய்திகள்

Career-FIT & IT பாடநெறிக்கான மாணவர் நேர்முகத் தேர்வு கரடியனாறு சமுதாயக் கல்லூரியில்

Career-FIT & IT பாடநெறிக்காகத் தெரிவுசெய்யப்படவுள்ள தகுதியான மாணவர்களுக்கான நேர்முகத் தேர்வு கரடியனாறு சமுதாயக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நேர்முகத் தேர்வில் 20 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் நடைமுறைப்படுத்தப்படும் இப்பாடநெறிக்கு மனிதநேயம் அறக்கட்டளை நிதி அனுசரணை வழங்கி வருகின்றது.

கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளில் சவால்களை எதிர்கொள்ளும் மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் திறன்களை மேம்படுத்தி வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுவதற்கான வழிகாட்டல்களையும் வாய்ப்புகளையும் வழங்குவதே இப்பயிற்சியின் நோக்கமாகும்.

இந்நேர்முகத் தேர்வில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் திட்ட முகாமையாளர் திருமதி ஹ. கிந்துஜா, பயிற்சி முகாமையாளர் திரு. சா. கிரேசியன் மற்றும் திட்ட உத்தியோகத்தர் தி. சங்கியா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

வேலைவாய்ப்பு