பிரேக்கிங்

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு சர்வமத ஒன்றியத்தின் திறன் மேம்பாட்டிற்கான டிஜிட்டல் அறிவுத்திறன் பயிற்சி

மட்டக்களப்பு சர்வமத ஒன்றியத்தின் திறன் மேம்பாட்டிற்கான டிஜிட்டல் அறிவுத்திறன் பயிற்சி
மட்டக்களப்பு சர்வமத ஒன்றியத்தின் திறன் மேம்பாட்டிற்கான டிஜிட்டல் அறிவுத்திறன் பயிற்சி

மட்டக்களப்பு சர்வமத ஒன்றியத்தின் திறன் மேம்பாட்டிற்கான டிஜிட்டல் அறிவுத்திறன் பயிற்சி

மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் (Inter Religious Federation – IRF) உறுப்பினர்களின் டிஜிட்டல் அறிவையும் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில், கரித்தாஸ் எகெட் (Caritas EHED) நிறுவனத்தின் கபோட் சமாதானத் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட டிஜிட்டல் அறிவுத்திறன் பயிற்சி அமர்வு 2026 நவம்பர் 05ஆம் திகதி விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு மதங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மக்களிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வரும் மட்டக்களப்பு சர்வமத ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாட்டுச் செயற்பாடுகளில் ஒன்றாக இப்பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன், கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் திரு. சதாசிவம் சசிதரன் மற்றும் ஜேர்மனிய அமைப்பான AGIAMONDO சார்பில் சிவில் சமாதானப் பணியாளராக (Civil Peace Worker – CPS) பணியாற்றும் திருமதி Leioni Zelasko ஆகியோர் கலந்துகொண்டனர்.

பயிற்சியின் வளவாளர்களாக ஊடகவியலாளர் செல்வி சௌமினி சுதந்தராஜ் மற்றும் திரு. ரொசான் ஜோயல் ஆகியோர் பங்கேற்று பயிற்சி அமர்வுகளை முன்னெடுத்தனர்.

இதன்போது ஸ்மார்ட்போன் மற்றும் கணினியின் அன்றாடப் பயன்பாடுகள், ATM மற்றும் CDM இயந்திரங்களின் செயற்பாடுகள், POS Terminal மற்றும் QR கொடுப்பனவு முறைகள், Card Reader பயன்பாடு, அரசாங்கத்தின் இணையவழிச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தொடர்பான நடைமுறை விளக்கங்களும் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவதற்குத் தேவையான அடிப்படை அறிவையும் நடைமுறைத் திறன்களையும் சர்வமத ஒன்றியத்தின் உறுப்பினர்களிடையே மேம்படுத்துவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

பல்வேறு மதங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மக்களிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் டிஜிட்டல் அறிவுத்திறனின் முக்கியத்துவத்தையும் இப்பயிற்சி எடுத்துரைத்தது.