விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பிரதான வளாகமான புதுக்குடியிருப்பு கிளையில், 23.10.2026 அன்று காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.
புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்செயலமர்வில், மட்டக்களப்பு பிராந்திய சமூகநல மருத்துவ உத்தியோகத்தர்களின் இணைப்பாளர் டாக்டர் வனிதா அனெஸ்டின் கலந்துகொண்டார்.
சமூகநல மருத்துவர்களான டாக்டர் வசனா, டாக்டர் M. I. P. நஃப்லா மற்றும் டாக்டர் M. N. F. ஃபசீனா ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு செயலமர்வை வழிநடத்தினர்.
மேலும், சமூக நலன்புரி அமைப்பின் பொறுப்பாளர் திருமதி சிவசுந்தரி, கல்லூரியின் அதிபர் திரு. T. சந்திரசேகரம், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பயிலுனர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.






மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.