டிஜிட்டல் ஊடகப் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு முக்கிய செய்திகள்

டிஜிட்டல் ஊடகப் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

1 min read
💬 0

டிஜிட்டல் ஊடகப் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

கிராமங்களில் இயங்கும் சமாதானக் குழுக்களுக்கான டிஜிட்டல் ஊடகப் பயன்பாடு, அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு கோவில் குளம் புகலிடம் மண்டபத்தில் நடைபெற்றது.

கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் திரு. எஸ். மைக்கல் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், ஊடகம் மற்றும் தொடர்பாடல் உத்தியோகத்தர் செல்வி S.சௌமினி மற்றும் இளங்கோ சஞ்ஜித் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு செயலமர்வை வழிநடத்தினர்.

இச்செயலமர்வின் மூலம் பொறுப்பான டிஜிட்டல் ஊடகப் பயன்பாடு, விமர்சனச் சிந்தனை மற்றும் ஆரோக்கியமான இணையப் பழக்கவழக்கங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அத்துடன், தவறான தகவல்கள், இணையவழித் துன்புறுத்தல் மற்றும் டிஜிட்டல் ஊடகப் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1665 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.