விசேட தேவையுடைய மாணவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும் முயற்சி
கல்முனை பிரதேசத்தில் செயற்பட்டு வரும் Rising Hands நிறுவனத்தின் ஊடாக, விசேட தேவையுடைய 40 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக இம்மாணவர்களுக்கு சிரட்டை உற்பத்திப் பொருட்கள் தயாரிப்பது தொடர்பான ஆறு மாதகாலப் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியை நிறைவு செய்த பயிலுனர்களில் சுயதொழில் மேற்கொள்ள முன்வந்த மூவருக்கான நேர்முகத் தேர்வு தற்போது நடத்தப்பட்டது.
இப்பயிற்சியின் மூலம் மாணவர்களின் கைவினைத் திறன்களை மேம்படுத்துவதுடன், சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கி அவர்களின் பொருளாதார சுயநிலையை வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.


மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.