வெள்ள எச்சரிக்கை மேலும் 24 மணி நேரத்திற்கு நீடிப்பு
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கின் கங்கை மற்றும் அத்தனகலு ஓயா படுகைகளின் தாழ்நிலப் பகுதிகளுக்காக விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கை மேலும் 24 மணி நேரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்துகொண்டு வருவதைக் கருத்திற்கொண்டு இந்த எச்சரிக்கை காலம் மேலும் 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கின் கங்கை மற்றும் அத்தனகலு ஓயா படுகைகளை அண்மித்துள்ள தாழ்நிலப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாயம் நிலவுவதால், அவர்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொடரும் சீரற்ற வானிலை மற்றும் ஆற்றின் நீர்மட்ட உயர்வு காரணமாக, அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் மற்றும் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.





