செங்கலடி மத்திய கல்லூரி உயர்தர மாணவர்களுக்கு AI விழிப்புணர்வு செயலமர்வு முக்கிய செய்திகள்

செங்கலடி மத்திய கல்லூரி உயர்தர மாணவர்களுக்கு AI விழிப்புணர்வு செயலமர்வு

1 min read
💬 0

செங்கலடி மத்திய கல்லூரி உயர்தர மாணவர்களுக்கு AI விழிப்புணர்வு செயலமர்வு

06.08.2026 அன்று செங்கலடி மத்திய கல்லூரியில், உயர்தரத்தில் கல்வி பயிலும் 55 மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.

இன்றைய கல்வி மற்றும் தொழில்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், எதிர்கால தொழில் மற்றும் கல்வி வாய்ப்புகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் இவ்விழிப்புணர்வு செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது, செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன, அதன் தற்போதைய பயன்பாடுகள், கல்வி நடவடிக்கைகளில் AI கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது, AI மூலம் கற்றல் மற்றும் தகவல் தேடலை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் எதிர்கால தொழில்துறையில் AI இன் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், மாணவர்கள் AI தொழில்நுட்பத்தை பொறுப்புடனும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இச்செயலமர்வில் 55 உயர்தர மாணவர்கள் கலந்துகொண்டு, செயற்கை நுண்ணறிவு தொடர்பான அடிப்படை அறிவையும் எதிர்காலத்தில் அதன் பயன்பாடுகள் தொடர்பான புரிதலையும் பெற்றுக்கொண்டனர்.

பாடசாலை மாணவர்களிடையே நவீன தொழில்நுட்ப அறிவை வளர்த்து, எதிர்கால கல்வி மற்றும் தொழில் உலகிற்கு அவர்களை தயார்படுத்தும் நோக்கில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி இவ்வாறான AI விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டு செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்