சுயதொழில் முயற்சியாளர்களின் விற்பனையை எவ்வாறு அதிகரிப்பது என்பது தொடர்பிலான செயலமர்வு Uncategorized

சுயதொழில் முயற்சியாளர்களின் விற்பனையை எவ்வாறு அதிகரிப்பது என்பது தொடர்பிலான செயலமர்வு

1 min read
💬 0

சுயதொழில் முயற்சியாளர்களின் விற்பனையை எவ்வாறு அதிகரிப்பது என்பது தொடர்பிலான செயலமர்வு

வந்தாறுமூலை பிரதேசத்தைச் சேர்ந்த சுயதொழில் முயற்சியாளர்கள் தங்களது உற்பத்திகளை சிறந்த முறையில் சந்தைப்படுத்தி, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் முறைகளின் ஊடாக விற்பனையை அதிகரிப்பது தொடர்பான செயலமர்வு இன்று 02.09.2026 புதன்கிழமை நடைபெற்றது.

வந்தாறுமூலை பிரதேச சபையின் ஒருங்கிணைப்பின் கீழ் நடைபெற்ற இச்செயலமர்வில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 40 சுயதொழில் முயற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

இச்செயலமர்வில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு, சுயதொழில் முயற்சியாளர்கள் தங்களது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான அடிப்படை உத்திகள், வாடிக்கையாளர்களை அடையாளம் காணுதல், உற்பத்திகளுக்கான சந்தையை விரிவுபடுத்துதல் மற்றும் விற்பனையை அதிகரிப்பதற்கான நடைமுறைகள் தொடர்பில் விளக்கங்களை வழங்கினார்.

அத்துடன், அமிர்தா நிறுவனம் சார்பில் திரு. நிரோஸன் அவர்கள் கலந்துகொண்டு Digital Marketing தொடர்பான விளக்கங்களை வழங்கியதுடன், சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான நடைமுறை ஆலோசனைகளையும் வழங்கினார்.

இதன்போது, இன்றைய டிஜிட்டல் சூழலில் சிறு மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு Business WhatsApp எவ்வாறு பயனுள்ளதாக அமையும் என்பது தொடர்பிலும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், பங்கேற்பாளர்களின் கைப்பேசிகளில் Business WhatsApp நிறுவித் தரப்பட்டதுடன், அதில் உற்பத்திகளை காட்சிப்படுத்துவதற்கான Catalogue (பட்டியல்) உருவாக்கும் முறை தொடர்பிலும் செயன்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டன.

சுயதொழில் முயற்சியாளர்கள் தங்களது உற்பத்திகளை நேரடி சந்தைகளை மட்டுமன்றி, சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் ஊடாகவும் பரந்தளவில் சந்தைப்படுத்துவதற்கான அறிவையும் நடைமுறைத் திறன்களையும் பெற்றுக்கொள்ளும் வகையில் இச்செயலமர்வு அமைந்திருந்தது.

கிராமப்புறங்களில் சுயதொழில் முயற்சிகளை ஊக்குவித்து, தொழில் முயற்சியாளர்களின் சந்தைப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் வருமான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான இவ்வாறான செயலமர்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1658 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.