ஆரோக்கிய சோலை: ஒருங்கிணைந்த மாதிரிப் பண்ணைத் திட்டத்தின்” ஒரு பகுதியான Production Area கட்டிடத் தொகுதி திறப்பு முக்கிய செய்திகள்

ஆரோக்கிய சோலை: ஒருங்கிணைந்த மாதிரிப் பண்ணைத் திட்டத்தின்” ஒரு பகுதியான Production Area கட்டிடத் தொகுதி திறப்பு

1 min read
💬 0

ஆரோக்கிய சோலை: ஒருங்கிணைந்த மாதிரிப் பண்ணைத் திட்டத்தின்” ஒரு பகுதியான Production Area கட்டிடத் தொகுதி திறப்பு

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் (VCOT) புதுக்குடியிருப்பு வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் “ஆரோக்கிய சோலை: ஒருங்கிணைந்த மாதிரிப் பண்ணைத் திட்டத்தின்” ஒரு பகுதியான Production Area கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.

இக்கட்டிடத் தொகுதி மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் நிதிப் பங்களிப்பின் மூலம் அமைக்கப்பட்ட நிலையில், அதன் திறப்பு நிகழ்வு 12.09.2026 அன்று நடைபெற்றது.

மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் தலைவர் திருமதி அபிராமி கைலாசபிள்ளை, அமெரிக்காவிலிருந்து வருகை தந்த திரு. கைலாசபிள்ளை அரவிந்தன் மற்றும் அவர்களுடன் வருகை தந்த குழுவினர் இணைந்து கட்டிடத் தொகுதியை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தனர். இதன்போது அவர்களின் ஞாபகமாக பழமரங்களும் நடுகை செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன், கல்லூரியின் அதிபர் திரு. த. சந்திரசேகரம், நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் திருமதி. ஹ. கிந்துஜா, பயிற்சி முகாமையாளர் திரு. சார்ல்ஸ் கிரேசியன் மற்றும் கல்லூரியின் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

எதிர்காலத்தின் உணவுப் பாதுகாப்பு, காலநிலை மாற்றங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் அவசியத்தை உணர்ந்து, விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி “ஆரோக்கிய சோலை: ஒருங்கிணைந்த மாதிரிப் பண்ணைத் திட்டம்” என்கின்ற தொலைநோக்கு சிந்தனையுடன் இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

எதிர்காலத்தில் சூரிய சக்தி பயன்பாடு, மூலிகைத் தோட்டம், பழத்தோட்டம், கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, இயற்கை பசளை உற்பத்தி, தொழில்நுட்பத்துடனான விவசாய செயற்பாடுகள், கழிவு மேலாண்மை பண்ணை முகாமைத்துவம் என அனைத்தையும் ஒரே இடத்தில் கற்றுக்கொள்ளும் ஒரு அனுபவ ரீதியான மாதிரிப் பண்ணையாக (Experiential Learning Farm) இது முழுமை பெற்று இயற்கை விவசாயத்துடன் கூடிய நவீன தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும் பெறுமதி சேர் உற்பத்தி தொடர்பான பயிற்சிகளுக்கான களமாக பயன்படுத்தப்படவுள்ளது.

மேலும், சூரிய சக்தி பயன்பாடு, மூலிகைத் தோட்டம், பழத்தோட்டம், கோழி மற்றும் தேனீ வளர்ப்பு, இயற்கை பசளை உற்பத்தி, தொழில்நுட்பத்துடனான விவசாய செயற்பாடுகள் மற்றும் கழிவு முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை ஒருங்கிணைத்த அனுபவ ரீதியான மாதிரிப் பண்ணையாக “ஆரோக்கிய சோலை” எதிர்காலத்தில் முழுமைப்படுத்தப்படவுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்