மாவடிவேம்பு Othniel Children Welfare Center உத்தியோகஸ்தர்களுக்கு ‘AI for Office Productivity’ பயிற்சிப் பட்டறை
மாவடிவேம்பு Othniel Children Welfare Center உத்தியோகஸ்தர்களுக்காக ‘AI for Office Productivity’ எனும் தலைப்பிலான ஒருநாள் பயிற்சிப் பட்டறை 15.09.2026 அன்று நடைபெற்றது.
இப்பயிற்சிப் பட்டறை மூலம் அலுவலகப் பணிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பணித்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவது தொடர்பான நடைமுறை அறிவு மற்றும் திறன்கள் வழங்கப்பட்டன.
இப்பயிற்சிப் பட்டறைக்கான வளவாளராக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வளவாளர் R. Joyel கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினார்.
இப்பயிற்சியில் கலந்துகொண்ட 15 உத்தியோகஸ்தர்களும் தமது பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.




மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.