காரைதீவில் AI தொடர்பிலான விழிப்புணர்வு செயலமர்வு முக்கிய செய்திகள்

காரைதீவில் AI தொடர்பிலான விழிப்புணர்வு செயலமர்வு

1 min read
💬 0

காரைதீவில் AI தொடர்பிலான விழிப்புணர்வு செயலமர்வு

செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பிலான விழிப்புணர்வு செயலமர்வு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் காரைதீவு விவேகானந்த சமுதாய அறக்கட்டளையில் நடைபெற்றது.

இதன்போது, செயற்கை நுண்ணறிவு (AI) என்றால் என்ன?, இன்றைய காலகட்டத்தில் AI-யின் முக்கியத்துவம், கல்வி, தொழில், வணிகம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் AI-யின் பயன்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும், ChatGPT, Gemini போன்ற AI கருவிகளைப் பயன்படுத்தும் முறைகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கற்றல் திறனை மேம்படுத்த AI-யை பயன்படுத்தும் வழிமுறைகள், AI பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய தனியுரிமை மற்றும் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன், AI மூலம் உருவாக்கப்படும் தகவல்களை சரிபார்ப்பதன் அவசியம், எதிர்கால வேலைவாய்ப்புகளில் AI ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் மற்றும் AI-யை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பான விடயங்களும் தெளிவுபடுத்தப்பட்டன.

இப்பயிற்சியில் 15 பேர் கலந்துகொண்டதுடன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள் தொடர்பான அடிப்படை விழிப்புணர்வைப் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்விற்கான வளவாளர்களாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வளவாளர் R. Joyel மற்றும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் Training Officer பிரணவன் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினர்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்