Magudam Child Development Center பணியாளர்களுக்கு AI பயிற்சி முக்கிய செய்திகள்

Magudam Child Development Center பணியாளர்களுக்கு AI பயிற்சி

1 min read
💬 0

Magudam Child Development Center பணியாளர்களுக்கு AI பயிற்சி

Trinco Road, செத்துக்குடா, Vaharai பகுதியில் அமைந்துள்ள Magudam Child Development Center பணியாளர்களுக்காக AI தொடர்பான பயிற்சி நிகழ்வு 25.09.2026 அன்று விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் நடைபெற்றது.

அலுவலகப் பணிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை திறம்படப் பயன்படுத்துவதன் மூலம் பணிகளின் வேகம், துல்லியம் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இப்பயிற்சி வழங்கப்பட்டது.

இப்பயிற்சியில் 18 பேர் கலந்துகொண்டதுடன், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள் தொடர்பான பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டனர்.

அன்றாட பணிகளில் AI தொழில்நுட்பத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்துவது தொடர்பான நடைமுறை அறிவு மற்றும் திறன்களை வழங்கும் நோக்கில் இப்பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வளவாளர் ஆர். ஜோயல் மற்றும் கல்லூரியின் வெளிக்கள பயிற்சி உத்தியோகஸ்தர் திரு. பிரதீப் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினர்.

இதன்போது, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை விரைவாகத் தயாரித்தல், தொழில்முறை மின்னஞ்சல்களை உருவாக்குதல் மற்றும் நிர்வகித்தல், தரவு பகுப்பாய்வு, விளக்கக்காட்சிகளை (Presentations) தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு அலுவலகப் பணிகளில் AI கருவிகளைப் பயன்படுத்தும் முறைகள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மேலும், அன்றாட அலுவலகப் பணிகளை நவீன AI கருவிகளின் உதவியுடன் விரைவாகவும், துல்லியமாகவும், திறம்படவும் மேற்கொள்வதற்கான நடைமுறை வழிமுறைகள் தொடர்பில் செயன்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டன.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அலுவலகப் பணியாளர்களின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதற்கும், AI தொழில்நுட்பத்தை அலுவலகப் பணிகளில் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்குமான அறிவை வழங்குவதற்கும் இப்பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

இப்பயிற்சியில் கலந்துகொண்ட 18 பங்காளர்களும் தமது பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்